Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”அவசர பணியால் அல்லல் படுவீர்கள்” கூடுதல் உழைப்பு இருக்கும் ..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று அவசர பணி உருவாகி அல்லல் தரக்கூடும். கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்.  பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க கூடும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்கள் இடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |