Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு..பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..எதிரிகளை கண்டு கொள்வீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகள் உதிரியாகும்  நாளாகவே இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மேன்மையும் உயர்வும் கிட்டும். நீண்ட நாளைய பிரச்சினை ஒன்று நல்ல தீர்வை கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது ரொம்ப நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீண் அலைச்சலும், காலதாமதமும் அவ்வப்போது வந்து செல்லும். மற்றவர்களுக்காக எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ளாமல் இருப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

படித்ததை எழுதிப் பாருங்கள் இன்று  சக மாணவர்கள் அன்பாகவே நடந்துகொள்வார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் :நீலம் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |