மிதுனம் ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத் தொல்லை கொஞ்சம் அதிகரிக்கும் நாளாகத்தான் இன்று இருக்கும். அதிக விரையங்கள் ஏற்படும். உடல் நிலையில் ரொம்ப கவனமாக இருங்கள். மிக முக்கியமாக சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், குடும்பத்தில் சின்ன, சின்ன தகராறுகள் ஏற்பட்டு மறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனமாக இருங்கள்.
இன்று உடல் சோர்வு இருக்கத்தான் செய்யும். திடீரென்று கவலைகளும் வந்து சேரும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை சிறப்பாகத்தான் இருக்கிறது. மதிப்பும், மரியாதையும் கூடும். மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை ஏற்படும். மனசஞ்சலம் ஏற்பட்டாலும் செலவுகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். இன்று ஆன்மிக பயணங்களும் செல்ல வேண்டியிருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்று கைகூடும், நாளாகத்தான் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் பொறுப்புகளை உணர்ந்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை எழுதி பார்க்க வேண்டும், ஆசிரியர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள், அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறத்தைக் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், உங்களுடைய தோசங்கள் அனைத்தும் நீங்கும் செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்