மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை இன்று சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனையும் தோன்றும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் இன்று முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களில் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாகவே வந்து கிடைக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். மன மகிழ்வான சூழ்நிலையில் இருக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
ஆசிரியர்களின் கவனித்து அதற்கு கவனத்திற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்