Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…திட்டங்கள் நிறைவேறும்… மனதில் மகிழ்ச்சி கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே,  இன்று காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அந்நிய தேச பயணம் செல்ல  தீட்டிய திட்டம் நிறைவேறும். மனதில் சந்தோசம் குடியேறும்.  இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் நடைபெறும். பேசும்பொழுது கவனம்  கவனமாக பேசுங்கள். குடும்ப உறவினர்களிடம் ஆலோசனை செய்வதையும்,  அடுத்தவர் பற்றி பேசுவதையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள், வாகனம் சுகம் ஏற்படும், வாகனத்தை ஓட்டிச் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். இன்று  உறவினர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும்.

கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண் :9  மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |