மிதுனம் ராசி அன்பர்களே, இன்று இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்கள் கூடும், திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும் ,வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் நீங்கள் முன்னேற்றத்தை அடையக்கூடும்.
மனம் மகிழும் படியான சம்பவங்களும் இன்று நடைபெறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும், முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைப் போக்குவதற்கான சூழல் இருக்கும். இன்று உங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. இன்று மாணவ செல்வங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியரின் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்