Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு… எதிர்ப்புகள் குறையும்.. புகழ் ஓங்கி நிற்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிரிகள் அடிபணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும்,  நண்பர்களின் உதவி நன்மையாகும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும்.  புதிய பெண் சினேகம் புத்துணர்ச்சி கொடுக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான  நிலைமை மாறும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு கொஞ்சம் வந்து செல்லலாம்.

பிள்ளைகளின் விஷயத்தில் நீங்கள் நிதாரணம்  கடைப்பிடிக்க வேண்டும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பக்குவமாக பேசுவது நன்மையை கொடுக்கும். காரியங்களில் அவ்வப்போது சின்ன தாமதம் வந்து சேரும்.முயற்சிகளில் உடனடியாக பலன் கிடைப்பது,ரொம்ப கடினம்இன்று. மனம் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இல பச்சை 

Categories

Tech |