பெரும்பாலான நேரங்களில், சுற்றோருக்காக வாழ்ந்து கொண்டிருக்க, நமக்கான நேரத்தை பற்றி சிந்திக்க நாம் மறக்கிறோம்.
பெரும்பாலான நேரங்களில், சுற்றோருக்காக வாழ்ந்து கொண்டிருக்க, நமக்கான நேரத்தை பற்றி சிந்திக்க நாம் மறக்கிறோம்.வழக்கமான திட்டங்களுடனும், எண்ணற்ற வேலைகளோடும் கடந்து செல்கிறது நம்முடைய வார நாட்கள். இவற்றுள், குடும்பதினரை, நண்பர்களை சந்திப்பது, சமூக வாழ்க்கையினை கட்டமைப்பது, அலுவலக வேலைகள், சந்திப்புகள், பணிகளை மேற்கொள்வது என அலைந்து கொண்டிருக்கையில் நமக்கான நேரத்தை திட்டமிடத் தவறிவிடுகிறோம்.
ஒரு வழியாக வார இறுதி வருவதற்குள், களைத்து, சலித்து வீட்டிற்குள் அமர்ந்து ஆன்லைனில் முழு நேர ஓய்வினை செலவிடுகிறோம். இதனால், நாம் மகிழ்ந்து செய்ய கூடிய பல விஷயங்களை பற்றி சிந்திக்க மறக்கிறோம் அல்லவா?
புதிய உருவாக்கங்கள்:
ஓவியம் வரைதல், இசைக்கு நடனம் அமைப்பது, நீங்களே செய்யக்கூடிய வீட்டு அலங்காரங்கள் என உங்களுக்குப் பிடித்த/ தெரிந்த பொழுதுபோக்கினை, சிறந்த படைப்புகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள். புது எண்ணங்களை கூட்டி உருவாக்கப்படும் படைப்பு, நல்ல இசை என உங்களை லேசாக்கும் பல விஷயங்கள் உங்களைச் சுற்றியே உள்ளது.
உங்களுக்கான சமையல்:
சமையல் செய்வது ஒரு சிகிச்சை. உணவு தயாரிக்கும் போது, சமையல் நிபுணத்துவம் மற்றும் சமையல் கலையின் திறனை வளர்த்து கொள்ள உதவும். அதுவும் உங்களுக்காக நீங்களே செய்யும் முழுமையான சமையல், அதனை ருசித்து மகிழும் தருணம், ஆஹா! உணவை விட வேறென்ன மகிழ்ச்சி உண்டு இவ்வுலகில்?
ஊர் சுற்றலாம்:
நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சந்தைகள் எனப் பல இடங்களுக்குச் செல்ல பல முறை திட்டமிட்டு அது நடக்காமல் போயிருக்கலாம். இந்த வார இறுதியில், அது போன்ற இடங்களுக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என உறுதி கொண்டு கிளம்பிவிடுங்கள். விரும்பிய இடத்திற்கு தனியாக சென்று உங்களுக்கான நேரத்தை திட்டமிட்டபடி செலவிடுங்கள்.