Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கலக்கிய இந்தியா… ”பரிசோதனையில் புதிய சாதனை” மாஸ் காட்டும் மாநிலங்கள் …!!

இந்தியாவில் ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையானது நான்கரை லட்சத்தை கடந்த நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க வேண்டும். பரிசோதனைகளை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.இதுவே கொரோனா இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் நாடு முழுவது தினமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் என்ற அளவில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது பரிசோதனையை மூன்று மடங்காக உயர்த்தின. ஏற்கனவே ஒரு நாளைக்கு 5 ஆயிரம் என்ற அளவில் பரிசோதனை செய்யப்பட்ட தலைநகர் டெல்லியில் தற்போது 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்ற அளவுக்கு பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் தற்போது உயர்ந்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பரிசோதனை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் நாடு முழுவதும் நேற்று மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 595 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.இந்திய அளவில் தற்போதுவரை 73 லட்சத்து 52 ஆயிரத்து 913 ரத்த மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்த பரிசோதனைகளை 730 அரசு ஆய்வகங்கள்,  270 தனியார் ஆய்வகங்களில் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |