Categories
மாநில செய்திகள்

இந்தி மொகலாய மொழியின் கலப்பு…! திராவிடமும் தமிழும் ஒன்னு…! பளிச்ன்னு சொன்ன வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  இந்தி என்ன மொழி தெரியுமா ? முகலாய மொழியில், சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் ஹிந்தி மொழி. அதற்கு வரலாறு குறைவு, இலக்கியம் குறைவு, நேற்று பிறந்த மொழி இந்தி. 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும் ?  இந்தியை படித்தால் ஊமையர்களாக,  வாய் பேச முடியாதவர்களாக,  நிராதரமானவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது, இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

ஆங்கிலம் எங்களுக்கு ஒன்றும் அந்நிய தேசத்து மொழிதானே தவிர, அறியாத மொழி அல்ல. அந்நிய தேசத்து மொழி ஆங்கிலம். அறியாத மொழி அல்ல. அறிந்த மொழி, உள்நாட்டு மொழி தான் இந்தி. அறியாத மொழி. அந்நிய மொழி எங்களுக்கு அணுக முடியாத மொழி. இந்திய ஒன்றியத்தில் தமிழ் தான் தமிழர்களின் அதிகாரம். அதை திணிப்பது சர்வாதிகாரம்.

இந்தியா முழுமைக்கும் திராவிட நாகரிகம் பறந்து இருந்தது. இந்தியா முழுவதிலும் ஒரே மொழி பேசப்பட்டது. அந்த மொழிக்கு தமிழ் என்று பெயர். திராவிடம் என்றும் பெயர். திராவிடம் ஒன்றுதான்,  தமிழும் ஒன்றுதான். இந்தியா முழுக்க பேசப்பட்ட மொழி சூழ்ச்சிகளின் காரணமாக, தென்னாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதை எதிர்த்து கொண்டு இருப்பதும்,  இது 85 ஆவது ஆண்டு என தெரிவித்தார்.

Categories

Tech |