Categories
Uncategorized அரசியல் மாவட்ட செய்திகள்

மியா காலிஃபா, சன்னி லியோன் திமுக உறுப்பினரா சொல்லவே இல்ல..!!

முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சில்க் சுமிதா, மியா கலிபா,சன்னிலியோன் என சகட்டுமேனிக்கு உறுப்பினர் அட்டை வழங்கி காமெடி பொருளாகி இருக்கிறது திமுகவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எல்லாரும் நம்முடன் என்ற ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை திமுக தொடங்கியுள்ளது. திமுகவில் இணைய விரும்புவோர் தங்களது செல்போன் எண்ணைக் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பியை பதிவிட்டால் போதும் யார் பேரில் வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டை பெறலாம் என்ற வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் பல்வேறு பிரபலங்களின் பெயர்களில் உறுப்பினர் அட்டைகளை சகட்டுமேனிக்கு பெற்று வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்க அதிபர் டோனால்ட்  டிரம்ப், திமுக விலிருந்து  இருந்து நீக்கப்பட்டு இருந்த மு.க. அழகிரி உள்ளிட்டோருக்கு இணைய வழி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்ட நிலையில் தற்போது வேற லெவலில் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

நடிகை சில்க்ஸ்மிதாவின் பெயரில்  பெறப்பட்ட திமுக உறுப்பினர் அட்டையில் அவரது தந்தையின் பெயர் வினித்சக்ரவர்த்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து கவர்ச்சி நடிகைகள் மியா கலிபா, சன்னி லியோன் பெயர்களில் இணையவழி உறுப்பினர் அட்டைகள் பெறப்பட்டுள்ளன. இதில் சன்னிலியோனின் தந்தை பெயர் டேனியல் வெப்பர் எனவும் மியா கலிபா வின் தந்தை பெயர் ஓட்டேரி நரி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக நடிகர் வடிவேலுவின் பிரபலமான சூனா பானா கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதே பெயரில்  உறுப்பினர் அட்டை தரப்பட்டுள்ளது. சூனா பானா வின் தந்தை பெயர்  கொக்கி குமார் என உள்ளது. தென்கொரிய அதிபர் கிங் ஜங்கும் இந்த இணைய வழியை பயன்படுத்தி திமுகவில் உறுப்பினர் அட்டை பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மிஸ்டு கால் முறையைப் பயன்படுத்தி ஆட்களை சேர்த்த பாஜக பயங்கர காமெடி கூத்துக்கு உள்ளானது.

அந்த வகையில் தற்போது திமுகவும் புரட்டி எடுக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் இணைய வழியில் திமுக உறுப்பினராக சேர்ந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள நிலையில் அது எத்தனை பேரு உண்மையானவர்கள் என்பது கேள்விக்குறியாகும், காமெடியாகவுமே உள்ளது.

Categories

Tech |