மியான்மர் நாட்டின் தலைவரை பல்வேறு காரணங்களால் ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ள நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்துள்ளது .
மியான்மர் நாட்டின் தலைவரையும் அதிபரையும் அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்துள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஜனநாயக ரீதியாக அறிவிக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டத்திற்கு விரோதமாக இறக்குமதி செய்து வைத்துள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியதாகவும் காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தையும் மீறியது என ஆறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை அந்நாட்டின் தலைநகர் நேபிடாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் மறுவிசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது மியான்மர் நாட்டின் தலைவர் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கார் ஒன்றில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் அவருக்கு தீடிரென தலைசுற்று ஏற்பட்டதால் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அப்படியே அமர்ந்துள்ளார். அதன்பின் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது வக்கீலிடம் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக வக்கீல்கள் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் .விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை நீதிபதிகள் ஏற்று வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இதனால் மறுபடியும் வந்த காரிலேயே அவர் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.