அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், போலந்து வீரரான ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் .
அமெரிக்காவில் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ,போலந்து வீரரான ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ், இத்தாலி வீரரான ஜானிக் சின்னெர் மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஹியூபெர்ட் 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட் கணக்கில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னெரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ்க்கு 2.20 கோடி ரூபாய் பரிசாகவும் ,தரவரிசை பட்டியலில் 1000 புள்ளிகள் கிடைத்துள்ளது.
தரவரிசை பட்டியலில் 1000 புள்ளிகளுடன் , ஏ.டி.பி மாஸ்டர் பட்டத்தை வென்ற போலாந்து நாட்டின் முதலாவது வீரர் என்ற பெருமையை ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் பெற்றுள்ளார். இந்த வெற்றியைப் பற்றி அவர் கூறும்போது, ‘நான் என்னுடைய வாழ்க்கையில் அடைந்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்’. இந்த போட்டி துவங்கியதிலிருந்து ,என்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளேன். வெற்றிக்காக 6 மாதங்கள் கடுமையாக பயிற்சி கொண்டிருந்தேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றதை பெருமையாக கருதுகிறேன், என்று கூறினார்.