மியான்மர் தூதர் தூதரக கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் அரசியல் தலைவர்களை சிறைப்பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆங் சான் சூகி மற்றும் அவருடைய NLD கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து பிரித்தானியாவுக்கான மியான்மர் தூதர் KYAW ZWAN MINN ஆங் சான் சூகி விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பின் லண்டனில் உள்ள தூதரக கட்டிடத்தில் இருந்து மியான்மரின் ராணுவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் தன்னை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் இனிமேல் மியான்மர் தூதர் நாட்டின் பிரதிநிதி இல்லை எனவும் அவரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் தூதரக கட்டிடத்திலிருந்து வெளியேறிய பின்பு தெருவில் நின்று கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும் புகைப்பட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து மியான்மர் தூதர் KYAW ZWAN MINN விவரித்ததாவது “மியான்மர் ராணுவம் லண்டனில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இவ்வாறு செயல் படுத்தப்படுகிறது எனவும் இது எப்போதும் எடுபடபோவதில்லை” எனவும் தெளிவாக அவர் கூறியுள்ளார்.