மியான்மரில் வன்முறை அதிகரிப்பதால் மியான்மர் குடிமக்கள் அமெரிக்காவில் வந்து தற்காலிகமாக வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் குடிமக்கள் தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் Alejandro Mayorkas அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் , ” மியான்மரின் தற்போதய நிலையைப் பற்றி நான் முழுமையாக ஆய்வு செய்த பிறகு அந்நாட்டை நான் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு நியமித்துள்ளதால், மியான்மர் குடிமக்கள் அமெரிக்காவில் வந்து தற்காலிகமாக வசிக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார். இயற்கை பேரழிவுகள் அல்லது அரசியல் பதற்றம் ஏற்படும் பொழுது பல நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து வசிப்பதற்கு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் வேறு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்கள் 12 மாதங்கள் வரை அங்கு வசிக்க அனுமதி உண்டு. அதே போல் சொந்த நாட்டில் பிரச்சனை நீடித்தால் அமெரிக்காவிற்கு வருபவர்கள் 18 மாதங்கள் வரை அங்கு தங்க அனுமதி உண்டு. தற்போது 1,600 மியான்மர் குடிமக்கள் அமெரிக்காவில் வசிக்கும் தகுதி உடையவர்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.