Categories
உலக செய்திகள்

மியான்மரில் இந்த நிலை தொடர்ந்தால்…. பொருளாதார தடை விதிக்கப்படும்… எச்சரித்த ஜோ பைடன்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மரில் ராணுவ ஆட்சி ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி  உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு உலக நாடுகள், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று கண்டனம் கூறி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, “மியான்மரில்  ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம்  அதிகாரத்தை கைப்பற்றியது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல். இது சட்டத்தின் மீதான நேரடி தாக்குதல். ஜனநாயக அரசிற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்  2016ஆம்  ஆண்டு பொருளாதார அபராதங்களை அதிகரிப்பதற்காக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அது தற்போது மதிப்பாய்வு செய்யப்படும். மியான்மரில் ராணுவ ஆட்சி  ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டிய நிலை உருவாகும் “என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |