மியன்மார் ராணுவ வீரர்கள் மக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியன்மார் ஜனநாயக ஆட்சி முறையை கவிழ்த்து ராணுவ ஆட்சியை நடப்பதை எதிர்த்து அந்நாட்டிலுள்ள இரு பெரிய நகரங்களான யாங்கூன் மற்றும் மண்டேலா போன்ற 40 இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமைதியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறையை நடத்தி ராணுவ வீரர்கள் மக்களை குருவியை சுடுவதுபோல் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர்.
இந்த ஆட்சியின் அடக்குமுறையை கண்டித்து 12 நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர் . ஐரோப்பிய கூட்டமைப்பு ஐ.நா பொதுசபையும் மியன்மார் ராணுவத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த கடுமையான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து மியான்மாரில் நடந்த ராணுவ வீரர்களின் மக்களின் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து பெருமளவில் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர்களின் இந்த மக்களின் மீதான கடுமையான வன்முறை தாக்கல் மூர்க்கத்தனமானதாகவும் மிக மோசமானதாகும் இருப்பதாகவும் இதனால் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.