Categories
உலக செய்திகள்

மியான்மர் ராணுவத்தினரின் …அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த …அதிபர் ஜோ பைடன்…!!!

மியான்மரில் ராணுவத்தினரால் ,ஒரேநாளில் 114 பேர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு, அதிபர் ஜோ பைடன் வன்மையாக கண்டித்துள்ளார் .

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ,ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ராணுவ ஆட்சியை  எதிர்த்து , பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, ராணுவத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் நேற்று முன்தினம், ஆயுதப்படை தினம் மியான்மர் நாட்டில் கொண்டாடப்பட்டது. இந்த ஆயுதப்படை தினத்திற்கு முன், அந்நாட்டு ராணுவ தலைவரான மின் ஆங் ஹேலிங் , ஆயுதப்படை தினத்தன்று போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ,ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவார்கள்  என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதனை  எதிர்த்து  பொதுமக்கள் யாங்கூன், மாண்டலே நகரங்களில்  அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர் .ஆனால் போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடிக்க தொடங்கியது. இந்த வன்முறை காரணமாக, பல இடங்களில் தீ வைக்கப்பட்டது. இதனால் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ,ராணுவத்தினர் போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்றனர். இதுநாள் வரை இல்லாத அளவிற்கு ,நேற்று ஒரே நாளில் மட்டும் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  எனவே ராணுவத்தினரின் அடக்குமுறை  ஆட்சியை கண்டித்து பல நாடுகளிலிருந்தும் , குறிப்பாக இங்கிலாந்து ,அமெரிக்கா, ஆஸ்திரேலியா ,ஜப்பான் உட்பட 12 நாடுகள்  ஒன்றிணைந்து ராணுவத்தினரை கண்டித்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் .

அதோடு ஐ.நா. பொது சபை மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்புகளிலிருந்து மியான்மர் ராணுவத்தினரை வன்மையாக கண்டித்துள்ளனர். இதைப்பற்றி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெலாவேர் மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மியான்மர்  ராணுவத்தினரின் அடக்குமுறையை  வன்மையாக கண்டிக்கிறேன். ராணுவத்தினரின் இந்த செயலானது, மிக மோசமானதாக உள்ளது. இவர்களின் இந்த அடக்குமுறையால் பல்வேறு அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்று கண்டனம்  தெரிவித்தார் .

Categories

Tech |