அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மியான்மர் விவகாரம் குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமெரிக்க அதிபரானார் ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் அவர்கள் மியான்மர் விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.
அதன்பின் அவர்கள் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது “மியான்மர் நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் அகற்றி ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கைப்பற்றியது. அதன்பின் ஆங் சான் சூகி மற்றும் பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 3400 பேரை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மேலும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். அங்கு அமைதியான சூழல் திரும்ப வேண்டும். மேலும் ஆசியாவின் ஐந்து அம்ச உடன்படிக்கை மியான்மர் நாட்டில் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.