இராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் உணவு மற்றும் எரிபொருள்களுக்கான விலைவாசி பெருமளவில் உயர்ந்துள்ளது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ஆட்சியை கலைத்து இராணுவத்தினர் அதிகாரத்தை கைப்பற்றினர். இதனையடுத்து இராணுவத்தினர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி மற்றும் அதிபர் என் மைன்ட் உட்பட பல அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பொதுமக்களும் கிளர்ச்சியாளர்களும் சூகிக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்துகின்றனர். இதில் கிளர்ச்சியாளர்கள் உட்பட பொதுமக்களையும் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்த நிலையில் மியான்மரில் உணவு மற்றும் எரிபொருட்களுக்கான விலை உயர்யால் மக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர். இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு பின் மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து வருகின்றனர். தற்போது தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பணமதிப்பிழப்பால் அதனை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனநாயக ஆட்சியில் டாலருக்கான கியாத்தின் மதிப்பு 1395 ஆக இருந்தது. மேலும் கடந்த 1 ஆம் தேதி டாலருக்கு நிகரான கியாத்தின் மதிப்பு 1690 ஆக இருந்தது. தற்போது பொருளாதார வீழ்ச்சியால் கியாத்தின் மதிப்பு 2700 ஆக குறைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் அறிவித்தனர்.