ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் பர்மா என்னும் நகர் அமைந்துள்ளது. அந்நகரில் திடீரென பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பர்மா நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்து தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.