காதல் வலையில் சிக்கி கர்ப்பமாகிய மிசோரத்தை சேர்ந்த சிறுமி குளியலறையில் வைத்து குழந்தை பெற்றுள்ளார்
சென்னை மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகில் மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தவர்கள் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.அதில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னைக்கு வந்து தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அச்சிறுமியை காதல் என்னும் பெயரில் வாலிபர் ஒருவர் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். இதனையடுத்து பிரசவ வலியில் துடித்த சிறுமி குளியலறையில் வைத்து குழந்தை பெற்றெடுத்து பின் யூடியூபை பார்த்து தொப்புள் கொடியை துண்டித்துள்ளார். இதன் பின்னர் தனக்கு தெரிந்த மாணவியிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் உள்ள தனது அறையில் குழந்தையை வைத்து அந்த மாணவி இரண்டு நாட்கள் பார்த்துக் கொண்டார்.
ஆனால் அதன் பிறகு வீட்டிற்கு பயந்து கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனக்கு தெரிந்த மற்றொரு பெண்ணிடம் குழந்தையை வளர்க்க சொல்லி கொடுக்க அந்த மாணவி முயன்றபோது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து குழந்தைகள் காப்பகத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன் அந்த பச்சிளம் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை பெற்றெடுத்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள விடுதியை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.