தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர் போராட்டங்களினால் சமூக நீதிக்கான வெற்றியை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார்.
சமூக நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்னும் தலைப்பில் தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாடு முழுக்க, சமூக நீதி பேரியக்கம் சென்று சேர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்கிறார்கள்.
அது வீண் போகவில்லை. நாட்டின் வரைபடத்தில் இருக்கும் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு போன்ற பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் இந்த காணொளி காட்சி மூலமாக தற்போது வரை சேர்ந்திருக்கிறோம். சமூக நீதி என்னும் கருத்தியல், நம் அனைவரையும் சேர்த்தது என்று கூறியிருக்கிறார்.
மேலும், தொடர் போராட்டங்களினால் சமூகநீதிக்கான வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்றார். சமூக நீதி என்பது திராவிட இயக்கம் இந்தியாவிற்கு அளித்த மிக முக்கிய கொடை. சமூக நீதி என்பது சமூகங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கும் வளர்ச்சி என்று தெரிவித்துள்ளார்.