Categories
அரசியல் மாநில செய்திகள்

அசெம்பிளியில் பேசிய MK.ஸ்டாலின்…! உற்று நோக்கிய உலகம்…. இந்தியவிலே செம மாஸ் …!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, கடந்த காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தபோது உரிமைகளை மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்திருந்தால் அவர்கள் மௌனியாக இருந்திருப்பார்கள், அதற்கு சட்டமன்றத்திலே தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஒரே முதல்வர் இந்தியாவில் தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்கள் மட்டும்தான்.

அந்த சட்டமன்றத்தில் அந்த தனி தீர்மானத்தை கொண்டு வந்து,  கழக தலைவர் தமிழக முதலமைச்சர் உரையாற்றிய போது,  உலகமே உற்று நோக்கி பார்த்தது. சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் அந்த தீர்மானத்தை வரவேற்றார்கள். பாஜகவினுடைய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வெளியே சென்றார்கள், அது அவர்களுடைய நிலைப்பாடு. ஆனால்  தமிழ்நாட்டினுடைய அதிமுக என்ற ஒரு கட்சி…

அதிலே பல்வேறு பிளவுகளாக பிரிவு பட்டு இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி, ஏதோ ஒரு காரணத்தை வைத்து,  தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, தேசிய அட்டவணையில் இருக்கின்ற 22 மொழிகளுக்கும் மிகப்பெரிய ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த தீர்மானத்தை எதிர்த்து,  அதற்காக ஆதரவளித்து பேசாமல், வாக்களிக்காமல், வெளியிலே சென்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள் என்பதை நான் எச்சரிக்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |