Categories
அரசியல்

பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்…. அறிவுரை வழங்கிய முதல்வர்..!!!

அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது முதலமைச்சர், தி.மு.கவின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு அதிகமாக வாய்ப்பு வழங்க வேண்டும். திமுகவின் மகளிர் அணியில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, அதிகமான இடங்கள் ஒதுக்கீடு செய்து தரப்பட வேண்டும். கடந்த 8  மாதங்களில் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தமிழகத்திற்கு தி.மு.க செய்திருக்கும் முக்கிய பணி, சாதனைகள் போன்றவற்றை மக்களுக்கு விளக்கமாக பட்டியலிட்டு எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட  வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |