Categories
மாநில செய்திகள்

கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் 

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக டி. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் டி. ராஜா அகில இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக நியமிப்பதாக  முடிவு எடுக்கப்பட்டது.

Related image

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அதிகாரப்பூர்வமாக அகில இந்திய பொதுச்செயலாளராக டி. ராஜா அறிவிக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட து. ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Image result for stalin dmk

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வான டி. ராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அம்சங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நேரத்தில் பொதுச்செயலாளரானது வரவேற்கத்தக்கது. ஏழை, எளிய மக்களின் உரிமைக்குரலாக, துணிச்சலான போராட்ட குணத்திற்கு சொந்தக்காரர் டி.ராஜா என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |