Categories
அரசியல்

இதையெல்லா செஞ்சது யாரு….? அடுக்கடுக்கா கேள்வி எழுப்பி….. எதிர்கட்சியினரின் வாயை அடைத்த ஸ்டாலின்…..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கலைஞரின் எந்த திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நீக்கியது எனது பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்டிருக்கிறார்.

சட்டப்பேரவையில், அம்மா மினி கிளிக்குகள் மற்றும் அம்மா உணவகத்தை கவனிக்காதது  தொடர்பில் எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மா உணவகத்தை சரியாக கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூறுகிறார்கள்.

அவ்வாறான பட்டியல்களை வாசிக்க வேண்டும், எனில் என்னிடம் அது நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆட்சி மாறியவுடன் சட்டமன்றம் இருந்த  இடத்தை, மருத்துவமனையாக யார் மாற்றினார்கள்? பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நினைவாக 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 மாடிக்கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கவனிக்காமல் விட்டது யார்?

அங்கிருந்த பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு கலைஞரின் பெயர் இருந்ததை மறைத்தது யார்? கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அவரின் பெயரை அகற்றியது யார்? செம்மொழிப் பூங்காவில் செடி கொடிகளை வளர்த்து கலைஞரின் பெயரை மறைத்தது யார்? வரும்முன் காப்போம்  திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்ற திட்டங்களை  கிடப்பில் போட்டது யார்?

போன்ற பல கேள்விகளை எழுப்பினார். இது போன்று அடுக்கடுக்காக என்னால் அதிக நேரத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்ப முடியும். இவை அனைத்தையும் நீங்கள் செய்ததால் தான் இதை நாங்கள் செய்திருக்கிறோம் என்று நான் கூறவில்லை. அவ்வாறு நடந்து கொள்ளும் எண்ணம் எனக்கு எப்போதும் வராது” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |