‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய வாட் பகுதி பாதிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே அது போல இந்த கீழடி கீழேயும் பாதுகாக்கப்பட வேண்டும் .