Categories
அரசியல் மாநில செய்திகள்

MKS சொல்கிறார்…. EPS செய்கிறார்… ஹீரோவான DMK, AIDMK.. கெத்து சார் நீங்க …!!

தமிழக அரசியலை பொறுத்தவரை திமுக தலைவர் முக.ஸ்டாலின் சொல்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்கின்றார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக மாறி இருந்தது சாத்தான்குளம் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரண சம்பவம். இது பலருக்கும் ஆத்திரத்தை மூட்டியது, தமிழக காவல்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் மாறிப்போனது. தேசிய அளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

ஜெயராஜும், பென்னிக்ஸ்சும் உடல்நலக்குறைவால் , இயற்கையான மரணம் அடைந்தார்கள் என தமிழக முதல்வர் தெரிவித்தார். அதேபோல அமைச்சர் கடம்பூர் ராஜு, இது லாக்கப் டெத் இல்லை என்று மறுத்தார். தமிழக அரசின் இந்த விளக்கம் பல்வேறு தரப்பினரையும் அரசை நோக்கி கேள்வி கேட்க வைத்தது.தமிழக அரசு  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி, இறப்பு விகிதத்தை குறைத்து அசத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.இதோடு எதிர்க்கட்சி திமுகவும் தொடர்ந்து அறிக்கை விட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நியாயம் கேட்டு ஆளும் கட்சியினர் கலங்க வைத்தது.

இதனிடையே தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த வழக்கில் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இல்லை என்றால் சிபிஐ விசாரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது.  அதுமட்டுமல்லாமல் திமுக சார்பில் குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்கபட்டது.அதிமுக அரசும் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. தவறு அரசின் பக்கம் இருக்க போய் தானே 25 லட்சம் கொடுத்தீர்கள். ஒரு இயற்கையான மரணம் என்றால் கொடுத்து இருப்பீர்களா? என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து தமிழக அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே ( நேற்று ) இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சிபிஐ விசாரணை என்பது அனைவரும் கோரியது, இதை திமுக வைத்து அரசை செய்வதை தடுக்க வேண்டும் என்று அரசு சார்பில் சி.பிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மக்கள் நலன் கருதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இதே போல MKS சொல்கிறார், EPS செய்கிறார் என ஸ்டாலினுக்கு ஆதரவாக ஹாஷ்டாக் ட்ரெண்டாக்கியதை தற்போது திமுக தொடர்ந்து வைத்த கோரிக்கை நிறைவேற்ற இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். மொத்தத்தில் மக்களுக்காக திமுக வைக்கும் கோரிக்கைகள் வைப்பது நியாயமாகவும், அதை அரசு செய்து அசத்துவது திமுக, அதிமுக இருவரையும் பாராட்ட வைக்கின்றது.

Categories

Tech |