காதல் திருமணம் செய்த எம்எல்ஏவின் வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி தொகுதி அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தில் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது மகளை அதிமுக எம்எல்ஏ பிரபு கடத்தி விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை புகார் கொடுத்தார்.
இதனிடையே இன்று அதிகாலை பிரபு சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகின .இதனை அறிந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் பிரபு வீட்டிற்கு சென்று தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதைப்பார்த்த காவல்துறையினர் அவரை தடுத்து பாதுகாப்பாக மீட்டனர்.