தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்பட அமைச்சர்களும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் என 124 பேர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், நமக்கு வாக்களிக்காத மக்கள் வருந்தும் அளவுக்கு மக்கள் பணி செய்ய வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பின்பற்றி அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறும் வகையில் நமது 5 ஆண்டு செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கினார்.