தலைநகர் டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் பணத்துக்காக உள்ளாட்சி இடங்களை ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் இச்சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், டெல்லி மத்தியாலா தொகுதி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறியதாவது, “எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் இரவு 8 மணியளவில் ஷியாம் விஹாரில் கட்சித் தொண்டர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். இக்கூட்டத்தில் ஒரு பிரச்சினை குறித்து சலசலப்பு ஏற்பட்டது. இது கடும் விவாதமாக உருவெடுத்து, பின் கை கலப்பில் முடிந்தது.
In Delhi, AAP MLA Gulab Singh Yadav gets beaten up & later he runs away to save his life
People who attacked him are none other than AAP workers
AAP workers did it because AAP MLA was involved in corruption! pic.twitter.com/knIvWRAHLg
— Mahesh Vikram Hegde 🇮🇳 (@mvmeet) November 21, 2022
அப்போது பலர் எம்எல்ஏ-வை கடுமையாக தாக்கினர். அதாவது, அவரது சட்டை காலரை பிடித்து இழுத்து சென்று தொடர் தாக்குதல் நடத்தினர். அதன்பின் ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு பயந்து ஓட துவங்கினார். எனினும் எதனால் இந்த பிரச்சனை வெடித்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.