சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதனால் பொது இடங்களில் இருக்கும் கட்சிக் கொடிக் கம்பங்கள் மற்றும் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சங்கராபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.