DNT தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையை நடைமுறைபடுத்த கோரி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாடானை சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான சே. கருணாஸ் அவர்கள் இன்று தமிழக முதல்வருக்கு DNT தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளார்.அதில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது முக்குலத்தோர் மற்றும் 68 சமுதாய மக்கள் சார்பாக பழைய DNT கோரிக்கை பற்றி வலியுறுத்தினேன்.
மேலும் அந்த மனுவில் , 68 சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் DNT சம்மந்தப்பட்ட அரசாணை வெளியிட உத்தரவிட்டீர்கள். அந்த அரசாணையில் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. பழைய DNT -க்கான அரசாணையை நடைமுறைப் படுத்தினால் தான் முக்குலத்தோர் உட்பட 68 சமுதாய மக்களுக்கு இ-சேவை மையத்தில் சான்றிதழ் பெற முடியும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.