Categories
தேசிய செய்திகள்

”சபாநாயகருக்கு KISS கொடுத்த MLA” அதுவும் ஃப்ளையிங் கிஸ்….!!

ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.

ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசினார். பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட அவர், யாரும் எதிர்பாராதவிதமாக சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து, தன்னை பேச அனுமதித்ததற்கு நன்றி கூறினார். அவரின் இந்தச் செயல் அவையில் இருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த அவர், ” நான் சபாநாயகருக்கு முதலில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கேன். அவரை அவமதிக்கும் நோக்கில் அவருக்கு நான் ஃப்ளையிங் கிஸ் கொடுக்கவில்லை. அவையில் 147 உறுப்பினர்கள் இருக்கையில், என்னை முதலில் கேள்வியெழுப்ப அழைத்ததற்கு நன்றி கூறும் விதமாக தான் நான் அவ்வாறு சைகை செய்தேன் ”, என்று கூறினார்.

இதேபோல, கடந்த வாரமும் தாரபிரசாத் மற்றொரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். ஆம், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம், தாரபிரசாத் ‘சார் நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா’ என்று கிண்டலாகக் கேட்க, அதற்கு அவரும் ‘நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.

கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, நவீன் பட்நாயக் மக்களிடம் அடிக்கடி ‘மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா’ என்று கேட்டுள்ளார். இதனைக் கிண்டல் செய்யும் விதமாகவே தாரபிரசாத் நவீனிடம் அவ்வாறு கேட்டுள்ளார். தாரபிரசாத்தின் ‘சார் நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா’ என்ற வார்த்தை ஒடிசாவில் செம ட்ரெண்டாகி அங்குள்ள இளைஞர்கள், தங்கள் பனியனில் இந்த வாசகத்தைப் பொறிக்கும் அளவிற்கு ஃபேமஸ் ஆகியது கூடுதல் தகவல்.

Categories

Tech |