விருதுநகர் மாவட்டத்தில் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை எம்.எல்.ஏ தங்கபாண்டியன் திறந்து வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரத்தில் பழனிச்சாமிநாடார் சுகாதார கூட்டுறவு மருத்துவமனை சரியான பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என எம்.எல்.ஏ தங்கபாண்டியனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து எம்.எல்.ஏவின் முயற்சியால் மருத்துவமனையை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ தங்கபாண்டியன் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.
மேலும் அவர் மருத்துவமனையின் வசதிகளை பார்வையிட்ட போது இன்னும் ஓரிரு வாரங்களில் கூட்டுறவு மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு கூட்டு மருத்துவமனை மட்டுமே உள்ளது எனவும் அதனை தரமானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் முத்துலட்சுமி, செட்டியார்பட்டி வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கூட்டுறவுவ போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் இளங்கோவன் செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.