Categories
அரசியல் மாநில செய்திகள்

2 தொகுதியிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிக்கு கடந்த  21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் , நாங்குநேரியில் நாராயணனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். திமுக தலைமையிலான கூட்டணியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனும் , விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதே போல நாம் தமிழர் கட்சியும் தங்களது வேட்பாளரை நிறுத்தியது. இதையடுத்து நேற்று (24 ஆம் தேதி) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

Image result for நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி

இதில் அதிமுகவின்  நாங்குநேரி வேட்பாளர் நாராயணன் 94,562 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இரண்டாவதாக காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன்  62,229 வாக்குகள் பெற்றார். இறுதியாக நாம்தமிழர் கட்சியின் ராஜ நாராயணன் வெறும் 2,662 வாக்குகளையே பெற்றார். அதே போல விக்கிரவாண்டி தொகுதியையும் அதிமுகவே கைப்பற்றியது.  விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 1,13,428 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தியால் 68,646 வாக்குகளை பெற்றார். நாம்தமிழர் கட்சியின் கந்தசாமியால் 2,913 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அதிமுக 2 தொகுதியையும் கைப்பற்றியதால் அதிமுகவினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Image result for நாராயணன் விக்கிரவாண்டி

இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இருவரும் வரும் 29ம் தேதி சபாநாயகர் தனபால் அறையில் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் இருவரும் பதவியேற்கின்றனர். முன்னதாக வெற்றி பெற்றதையடுத்து இருவரும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Categories

Tech |