Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு வந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் முத்தையன் கரடு பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் இருந்தார். இவர் செல்போன் டவரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வசித்து வரும் பிரியங்கா என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுப்பிரமணி தனது மனைவியுடன் கடந்த 31-ஆம் தேதி மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது திடீரென சுப்பிரமணி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மாமனார் சுப்பிரமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |