மொபட் மீது மினி வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டை பகுதியில் விவசாயியான துரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் துரையன் புவனேஸ்வரி, தனது மாமியார் பாப்பாத்தி மற்றும் அதே ஊரை சேர்ந்த இந்திராணி ஆகியோருடன் மொபட்டில் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி வேன் இவர்களின் மொபட் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் சிக்கிய மினி வேன், மொபட் ஆகிய இரண்டு வாகனங்களும் சாலை ஓரத்தில் கவிழ்ந்து விட்டது. அதன் பின் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரியும், இந்திராணியும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.