மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாந்தி நகர் பகுதியில் ரஞ்சனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மார்க்கெட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாந்தி நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரஞ்சனாவின் உடலை உடனடியாக கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.