மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.தொட்டம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக காணன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது எச்.தொட்டம்பட்டி பிரிவு சாலை அருகில் காணன் சென்றபோது சேலத்தில் இருந்து வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது.
இதனால் படுகாயம்டைந்த காணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.