மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெய்வநாயகப்பேரி பகுதியில் பரமசிவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பொன்னாக்குடி நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் ஒன்று வந்து கொடிருன்தது. அப்போது மொபட்டும் பரமசிவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பலத்த காயமடைந்த பரமசிவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பரமசிவனை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.