Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இங்க தான் நிறுத்தியிருந்தேன்” உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மொபட் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளகோவில் புதிய பேருந்து நிலையம் அருகில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த மொபட் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து குமாரசாமி வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் முத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷை கைது செய்ததோடு அவரிடமிருந்த மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |