Categories
தேசிய செய்திகள்

“மொபைல் ஆப் 2.0″…. புதிய செயலியை அறிமுகப்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. முழு விவரம் இதோ….!!!!

டெல்லி உச்சநீதிமன்றம் ‘சுப்ரீம் கோர்ட் மொபைல் ஆப் 2.0″ என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த செயலி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆப்பிள் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து அதிகாரிகளும் தங்களுடைய சொந்த அணுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதன் பிறகு மத்திய அரசு அமைச்சகத்தின் சட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் வழக்கின் நிலை குறித்து செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். அதோடு தங்களின் வழக்குகளின் நிலை, உத்தரவு, தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |