Categories
லைப் ஸ்டைல்

செல்போனால் முளைக்கும் கொம்பு….. ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்….!!

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கண் பார்வைக் கோளாறு மற்றும் கழுத்து வலி மட்டும் ஏற்படுவதில்லை கொம்பும் முளைக்கும்.

உலகம் முழுவதும் செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அனைத்து வேலைகளையும் செல்போன் மூலமாகவே செய்துவிட முடிகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து போனது. செல்போன் பயன்பாட்டில் எவ்வளவோ நன்மைகள் உள்ளது. அதேபோன்று அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் தீமைகளும் ஏற்படுகின்றது.

கண் பார்வை கோளாறு தலைவலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே இருந்துவரும் நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களின் தலையின் பின்புறம் மண்டையின் உள்ளே கொம்பு போன்று கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்துள்ளனர்.

சிறுவயதில் முட்டிக் கொண்டால் கொம்பு முளைக்கும் என்பார்கள். ஆனால் அது இப்போது செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும் என்பது போல் இருக்கின்றது. இதற்கான காரணங்கள் வெகுநேரம் செல்போன் பயன்படுத்தும் பொழுது தலையை குனிந்தபடி வைத்திருப்போம் அப்போது அதிகம் வரும் பிரச்சனை கழுத்துவலி இது ஒரு சிறிய பாதிப்பு. ஆனால் இதுவே அதிக நாட்களாக தொடர்ந்து இருந்தால் இதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். எப்படிப்பட்ட பாதிப்பு என்றால் ஒருவரின் தலை மண்டை ஓட்டில் எலும்பு வளர்ச்சியாக இருக்கும்.

இந்த எலும்பு கழுத்தின் மேல் பகுதி மண்டையோட்டில் வளரும். இந்த எலும்பு கொம்பு மாதிரி இருக்கும் எனவும் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்ய ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸ்ரே எடுத்து ஆய்வு செய்துள்ளனர். என்னதான் செல்போனில் புதிதாய் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தாலும் அது அனைத்தும் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கவே  செய்கிறது.  செல்போனை பயன்படுத்துவது தவறு அல்ல ஆனால் எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடப்பது தான் தவறான விஷயம். அதனால் செல் போனை அளவோடு பயன்படுத்தி இன்னல்களிலிருந்து விலகியே இருக்கவும். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |