மொபைல் சார்ஜர் வெள்ளை நிறம் அல்லது கருப்பு நிறமாக தான் பெரும்பாலும் இருக்கும். மொபைல் கம்பெனி நினைத்தால் சார்ஜரை வேறு நிறத்தில் வடிவமைக்க முடியும். ஆனால் வெள்ளை நிறத்தில் வடிவமைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை ஈர்க்காது. மேலும் பெரும்பாலான வீடுகளில் வெள்ளை நிற ஸ்விட்ச் போர்டு தான் இருக்கும். அதற்கு பொருத்தமாக வெள்ளை நிற சார்ஜர் தயாரிப்பது வழக்கம்.
குறிப்பாக வெள்ளை நிறத்தை விட கருப்பு நிற சார்ஜர் தயாரிப்பதற்கு செலவு குறைவு தான். ஆனால் கருப்பு நிற சார்ஜர் மிகுந்த வெப்பத்தை ஈர்க்கும். குறிப்பாக கருப்பு நிற சார்ஜரில் சிவப்பு நிறத்தில் reflecting light கொடுத்திருப்பார்கள். இது இருட்டில் சார்ஜர் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான்.