கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கவுன்டர் பாயிண்ட் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில்,
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 38 சதவிகித விற்பனை வீழ்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.