ஆடி நிறுவனம் தற்போது தனது நான்காம் தலைமுறை ஏ8.எல் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது .
இந்தியாவில் 2017-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கிவிட்டது . இந்த ஆடி ஏ8.எல். காரின் நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீட்டராக உருவாக்கப்பட்டுள்ளது . இது முந்தைய மாடலைக் காட்டிலும் 37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரம் அதிகமாக கொண்டுள்ளது .
மேலும், இதன் உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை கொடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இதன் இருக்கை மசாஜ் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் நீண்ட தூர பயணம் சென்றாலும் உடல் களைப்பு ஏற்படாது . இதுமட்டுமின்றி , பின் இருக்கையில் பயணிகளின் காலுக்கு மசாஜ் செய்யும் மசாஜரும் உள்ளது.
இந்த மாடலானது இந்தியாவில் 3 லிட்டர் வி 6 டீசல் மற்றும் என்ஜின் கொண்டு அறிமுகமாக உள்ளது . இது டீசல் மாடல் 340 ஹெச்.பி. திறனும் பெட்ரோல் மாடல் 286 ஹெச்.பி. திறனைக் கொண்டுள்ளது . இதன் விலை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது . இதனால் இந்த காரின் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது .