ஸ்ரீ நகரில் அடிக்கடி நடைபெறும் கல்வீச்சை எதிர்கொள்ள CRPF பெண் காவல் அதிகாரிகளுக்கு அதிநவீன பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவற்படையைச் சேர்ந்த 300 பெண் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீநகரில் அடிக்கடி நடைபெறும் கல் வீச்சு மற்றும் தாக்குதலை தடுக்கும் போது பெண் காவற்படையினர் காயம் அடைகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து கல்வீச்சு காயத்திலிருந்து தடுக்க பெண் காவற்படையினருக்கு நவீன பாதுகாப்பு வசதி கொண்ட உடையை ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டியூட் தயாரித்துள்ளது. இதனை CRPF இயக்குனர் ஆர்.ஆர்.பத்பூக்கர் தலைமை அலுவலகத்தில் வைத்து பெண் காவல் அதிகாரிகளுக்கு வழங்கினார். இந்த உடையானது உடலின் விலா எலும்பு பகுதி, கைகளின் பின்புறம், தொடை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உடையானது 6 கிலோ எடையில் இருக்கும் என்று ஆர்.ஆர்.பத்பூக்கர் தெரிவித்துள்ளார்.