இந்தியா அமெரிக்கா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இந்தியா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அதில்,கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில்,
இந்திய அரசு அதனை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவாக மருத்துவ வசதிகளை உருவாக்கியதால், இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டை இப்படியா எதிர்பார்த்தோம் என கேள்வியும் எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு நமது பொருளாதாரத்தையும், சுகாதார அமைப்பையும் சோதித்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.